• Sat. Nov 28th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

சோழவந்தானில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம்..,

ByKalamegam Viswanathan

Nov 27, 2026

மதுரை வடக்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர் திமுக சார்பில் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணி மாநில செயலாளருமாண உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சோழவந்தான் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் தலைமை தாங்கினார் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் முன்னிலை வகித்தார். வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் அன்னதானத்தை துவக்கி வைத்தார்.

இதில் சோழவந்தான் பேரூராட்சி திமுக கவுன்சிலர்கள் வார்டு செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் உதயநிதி ஸ்டாலின் பெயரில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அன்னதானத்தில் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.