மத உணர்வுகளை புரிந்து செயல்பட்டால் எல்லோருக்கும் நல்லது என திருப்பரங்குன்றம் தீப விவகாரம் குறித்து, திருமூர்த்தி மலை உலக சமாதான அறக்கட்டளை நிறுவனர் பரஞ்சோதி குரு மகான் மதுரையில் பேசினார்.
மதுரையில் திருமூர்த்தி மலை உலக சமாதான அறக்கட்டளை நிறுவனர் பரஞ்சோதி மகானின் சத்சங்கம் நடைபெற்றது.
நிகழ்வில் மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் திருமூர்த்தி மலை உலக சமாதான அறக்கட்டளை நிறுவனர் குரு மகான் பரஞ்சோதி மகானுக்கு உலக அமைதிக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது .இதனை மதுரை நிலையூர் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சுப்ரமணிய தேசிக சுவாமிகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓய்வு முனைவர் மணிவண்ணன், ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் சண்முக சுந்தரம், லயன்ஸ் முன்னாள் கவர்னர் மணிகண்டன், உலக சமாதான அறக்கட்டளை அறங் காவலர்கள் கே எஸ் சுந்தரராமன், நவீலு சுப்ரமணியன், மதுரை உலக சமாதான அறக்கட்டளை அறங்காவலர் தொழிலதிபர் சந்தோஷ் சுப்பிரமணியன், மற்றும் அறங்காவலர்கள் ராஜேந்திரன், அம்மையப்பன், பூபதி, விஞ்ஞான செல்வர், முத்துக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்
நிகழ்வில்
திருமூர்த்தி மலை உலக சமாதான அறக்கட்டளை நிறுவனர் பரஞ்சோதி குரு மகான் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தனிமனித வாழ்க்கை திறம்பட இருப்பதற்கான வழிமுறைகளை உலகம் முழுவதும் அளித்து வருவதால், ‘உலக அமைதி தூதுவர்’ என்ற விருது மலேசியாவில் கொடுக்கப்பட்டது. இந்தியா அற்புதமான நாடு. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அரசியலமைப்பை கொண்ட நாடு. இதில் மனித உணர்வுகளை புரிந்து கொண்டு அரசுகள் செயல்பட வேண்டும். அப்போது அமைதி தானாகவே ஏற்படும். அவரவர்களுடைய மத உணர்வுகளை புரிந்து செயல்பட்டாலே, நாட்டில் அமைதி உண்டாகும். எல்லோருக்குமானது தான் அரசியல்.
இந்த பிரபஞ்சம் ஒளி வடிவத்தில் தான் தோன்றியது. அனைவருக்கும் வழியை கொடுப்பது தீபஒளி தான். அதே தீபத்தை வைத்து, பிரச்சனையை வளர்க்க வேண்டிய அவசியம் இல்லை. எதையும் சிந்தனை செய்துதான் செய்ய வேண்டும்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி ஏன் செய்தார்கள் என அவர்களுக்கு தான் தெரியும். எது நடந்தாலும் நன்மைக்காகவே இருக்கட்டும். நடந்ததெல்லாம் நன்மைக்கே இனி வரும் காலமும் நன்மையாகவே இருக்கும்.

அறத்தோடு கூடிய ஆட்சிதான் சிறப்பாக இருக்கும். அறம் தான் ஆன்மிகம். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கக்கூடிய நிர்வாகத்தை அரசு உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அறங்காவலர் சந்தோஷ் சுப்பிரமணியன் செய்திருந்தார்


