

சமயத்தில் விலங்குகள் செய்யும் சில சம்பவங்கள் குறும்பு தனமாகவும், வேடிக்கையாகவும் இருக்கும். அது காண்போரை சிரிப்பிலும் சிந்திப்பிலும் ஆழ்த்தும்.
அந்த வகையில் ஒரு குட்டிக் குதிரையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் காந்திபுரம் செல்லும் தனியார் பேருந்து ஒன்றில் குதிரை ஒன்று ஓடுவது போல ஓவியம் பேருந்தில் வரையப்பட்டுள்ளது. அந்த பேருந்து சென்றபோது அதை பார்த்த குட்டிக் குதிரை ஒன்று அதை உண்மையான குதிரை என்றே எண்ணி அந்த பேருந்துடன் ஓட தொடங்கியுள்ளது. நெரிசலான சாலைகளிலும் விடாமல் பேருந்தின் பக்கவாட்டில் குதிரை ஓவியத்துடனே குட்டிக் குதிரை ஓடி வரும் வீடியோ பார்ப்போரை க்யூட் என்று சொல்ல வைத்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
