

சொந்த தொகுதியிலேயே ஜெயிக்காத அண்ணாமலை தெலுங்கானா, தமிழ்நாடு அரசுகளை கவிழ்ப்பாரா? என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் கிண்டலடித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்…
“தெலுங்கானாவில் நாங்கள் 103 எம்எல்ஏ-க்களை வைத்து இருக்கிறோம், நட்புக் கட்சிகளோடு எங்களுக்கு 110 எம்எல்ஏ-க்கள் பலம் உள்ளது. ஆனால், எங்கள் அரசை கவிழ்ப்போம் என்றும் அண்ணாமலை கூறுகிறார். ஏக்நாத் ஷிண்டே வகை அரசியல் தான் உங்களின் அரசியலா? இதுதான் உங்களின் ஜனநாயகமா? இதுதான் நீங்கள் அரசியல் நடத்தும் விதமா?” என்று கேள்வி எழுப்பி யுள்ளார். மேலும், “தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலின் ஆட்சியைக் கவிழ்க்கப் போவதாக பாஜக கூறுகிறது. தமிழ்நாட்டில் இருந்து கூட ஏக்நாத் ஷிண்டே வரப் போவதாக அண்ணா மலை சொல்கிறார். அவரால் அவரின் சொந்த தொகுதியில் (அரவக்குறிச்சி) கூட வெற்றிபெற முடியவில்லை. சொந்த தொகுதியில் வெற்றியை பெற முடியாத அண்ணாமலைதான் தமிழ்நாட்டில் ஆட்சியை கவிழ்க்கப் போவதாக கூறுகிறார்” என்றும் சந்திர சேகர ராவ் கிண்டலடித்துள்ளார்.