• Thu. Aug 13th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ByM.JEEVANANTHAM

Mar 4, 2025

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தங்களது வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் மாவட்டத் தலைவர் ஷகிலா பானு தலைமையில்
நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,
30 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்காததை கண்டித்தும் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டியும்
அங்கன்வாடி பணியாளர்களுக்கும் உதவியாளர்களுக்கு ஒரு மாதம் விடுமுறை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 300க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.