

இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு (2023 – 24) நிதியிலிருந்து புத்தூர் ஊராட்சியில் 16 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை ப்ரியதர்ஷினி என்ற குழந்தையை வைத்து சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து சுந்தரராஜபுரம் ஊராட்சியில் 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்ட நியாய விலைக்கடையையும் S.தங்கப்பாண்டியன் அவர்கள் திறந்து வைத்தார்.*
குழந்தைகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் Ex.மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி Ex.ஊராட்சி மன்ற தலைவி ராமலட்சுமி அங்கன்வாடி பணியாளர் முத்துலட்சுமி மாவட்ட பிரதிநிதி கணேசன் கிளைச்செயலாளர்கள் பாலகணேஷ் கருப்பையா கருணாகரன் மாடசாமி லிங்கராஜ் சுருளி கனகராஜ் கழக நிர்வாகிகள் ஊர் நிர்வாகிகள் பொதுமக்கள் குழந்தைச்செல்வங்கள் கலந்து கொண்டனர்.

