• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

மோசமான வானிலை காரணமாக அந்தமான் விமானங்கள் ரத்து..!!

ByA.Tamilselvan

Nov 3, 2022

மோசமான வானிலை நிலவுவதால் அந்தமான் செல்லும் விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
அந்தமான் சுற்றுலா தளமாக இருப்பதால் தினந்தோறும் பெருமளவு பயணிகள் சென்று வந்தனர். அது மட்டுமின்றி அந்தமானில் தமிழ்நாடு உட்பட தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் ஏராளமானவா்கள் வசிப்பதால், அந்தமான் விமானங்களில் எப்போதுமே பயணிகள் கூட்டம் நிறைந்து இருக்கும். இந்நிலையில் தற்போது அந்தமானில் மோசமான வானிலை நிலவுவதாலும், மேலும் அந்தமான் விமான நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதாலும் சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் விமானங்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து அந்தமானுக்கு இயக்கப்படும் ஏழு விமான சேவைகளும் 4-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மீண்டும் 5-ந்தேதி முதல் அந்தமானுக்கு சென்னையில் இருந்து விமான சேவைகள் தொடங்குகிறது.