• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தேனுர் பயிர் அறக்கட்டளை பள்ளியில் வானியல் அபூர்வ நிழலில்லா நாள்

ByKalamegam Viswanathan

Apr 19, 2023

நேரு நினைவு கல்லுரி, நேரு நினைவு கல்லுரி அஸ்ட்ரோ கிளப் ஆகியவை இணைந்து தேனுர் பயிர் அறக்கட்டளை பள்ளியில் நிழலில்லா நாள் நிகழ்வு கோலாகலமாக நடந்தது. நேரு நினைவு கல்லூரியின் இயற்பியல் உதவி பேராசிரியர் ரமேஷ் அவர்கள் பங்குபெற்று நிழலில்லா நாள் பற்றி எடுத்துரைத்தார். இந்த நிகழ்வில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நிழல் இல்லா நாள் குறித்தும் அந்த நிழலை வைத்து எவ்வாறு பூமியின் சுற்றளவு மற்றும் ஆரத்தை அளக்க முடியும் என்பதும் விளக்கப்பட்டது. 18.04.23 செவ்வாய் கிழமை மதியம் 12:15 மணி அளவில் சோதனை மூலம் நிரலா தினம் மாணவ மாணவிகளுக்கு காண்பிக்கப்பட்டது.

பொதுவாக ஒரு பொருளின் நிழலானது சூரியன் உச்சிக்கு செல்லச் செல்ல சிறிதாகிக்கொண்டே வரும் என நமக்கு தெரியும். சூரியன் நம் தலைக்கு நேர்மேலே இருக்கும்போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிவிடும் அதாவது நிழல் காலுக்குக் கீழே இருக்கும். ஆனால், நடைமுறையில் தினமும் சூரியன் சரியாக தலைக்கு மேலே வருவதில்லை. ஆண்டிற்கு இரண்டுமுறை மட்டுமே ஒரு இடத்தின் தலைக்கு மேலே வரும். ஆக, ஒரு இடத்திலுள்ள ஒரு பொருளின் நிழலின் நீளம் ஆண்டிற்கு இருமுறை பூஜ்ஜியமாகின்றது, இல்லையா அந்த நாளையே நிழலில்லா நாள்'(Zero Shadow Day) என்கிறோம்.