• Thu. Jun 18th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

சலூன் கடை திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக தூய்மை பணியாளர்…

ByS. SRIDHAR

Mar 6, 2026

புதுக்கோட்டை பெரியார் நகரில் இன்று புதிதாக சலூன் கடை ஒன்று திறக்கப்பட்டது. அந்தக் கடையின் உரிமையாளர் அந்தப் பகுதியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக தூய்மை பணியில் ஈடுபட்டு வரும் மாநகராட்சி தூய்மை பணியாளர் செல்லையாவை கௌரவப்படுத்தும் விதமாக இஸ்மாயில் ஜமீல் என்பவர் தனது புதிய சலூன் கடையை திறப்பதற்கு சிறப்பு அழைப்பாளராக அழைப்பு விடுத்திருந்தார். அவரின் அழைப்பை ஏற்று செல்வராஜ் புதிய சலூன் கடையை திறந்து வைத்தார். சலூன் கடை உரிமையாளர் இந்த செயல் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இது குறித்து பேசிய தூய்மை பணியாளர் செல்லையா, 40 ஆண்டுகளுக்கு மேலாக தூய்மை பணியில் ஈடுபட்டு வருவதாகவும், தன்னையும் மதித்து சலூன் கடை திறப்பதற்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொண்ட அவர், கடை திறப்பு விழாவிற்கு தன்னை அழைத்தது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார்.