• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

மக்காச்சோள பயிர்களில் அமெரிக்கன் படைப்புளு தாக்குதல்.., நூற்றுக்கணக்கான ஏக்கர் பாதிப்பு…

ByP.Thangapandi

Nov 15, 2023

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவிற்குட்பட்ட சேடபட்டி, பேரையூர் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கரில் மானாவாரி விவசாயமாக விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர்.

இந்த மக்காச்சோள பயிர்களை அமெரிக்கன் படைப்புளு தாக்கி வரும் சூழலில் நூற்றுக்கணக்கான ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்துள்ளன. அடுத்தடுத்த பயிர்களுக்கும் இந்த படைப்புளு பரவும் என கூறப்படும் நிலையில் பெரும் அளவில் பாதிப்பு ஏற்படும் முன் படைப்புளுக்களை கட்டுப்படுத்தவும், பாதிப்படைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்க நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.