• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பயணியின் உயிரைக் காக்க ரயில்வே பிளாட்பாரத்தில் பயணித்த ஆம்புலன்ஸ்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை இரயில் நிலையத்தில் வாரணாசியில் இருந்து இராமேஸ்வரம் நோக்கி சென்ற பயணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் பயணியின் உயிரை காப்பாற்ற 108 ஆம்புலன்ஸ் வாகனம் இரயில்வே பிளாட்பாரத்தில் பயணித்தது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள லஷ்சுமி நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்த சேகர்(60) என்பவர், தன் மனைவியுடன் சென்னையில் இருந்து காசி சென்று காசி விஸ்வநாதரை தரிசினம் செய்து விட்டு இராமேஸ்வரம் நோக்கி வாரணாசி இராமேஸ்வரம் இரயிலில் பயணம் செய்தனர். இரயில் மானாமதுரை அருகில் சென்று கொண்டிருந்த போது பயணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

இரயிலில் பயணித்தவர்கள் மானாமதுரை ஸ்டேஷன் மாஸ்டரை தொடர்பு கொண்டு மானாமதுரை இரயில்வே நிலையத்தில் பயணியை இறக்கினர். மானாமதுரை இரயில்வே மருத்துவர் மீனாட்சி பயணிக்கு முதலுதவி செய்தார். இரயிலில் காவல் பணியில் இருந்த இரயில்வே பாதுகாப்பு படை காவலர் பழனி மற்றும் இரயில்வே போலீஸ் சார்பு ஆய்வாளர் துரை தலைமையிலான காவலர்கள் 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் தெரிவித்தனர். பயணி மிகவும் நடக்க முடியாத நிலையில் இருந்த நிலையில் ஆம்புலன்ஸ் வாகனத்தை பிளாட்பாரத்தில் இயக்கி பயணியை ஏற்றினர். வாகனம் உடனடியாக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு பயணியை ஏற்றிச் சென்றது. துரிதமாக செயல்பட்டு பயணியின் உயிரை காப்பாற்றி இரயில்வே போலீசாரை மக்கள் பாராட்டினர்.