• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

உலர் திராட்சை நீரின் அற்புத பயன்கள்:

Byவிஷா

Feb 27, 2023

பலரும் விரும்பி சாப்பிடக்கூடிய பழங்களில் ஒன்று தான் திராட்சை. குறிப்பாக நோய் வாய்பட்டுள்ளவர்களை பார்க்க செல்லும் போது திராட்டை உள்ளிட்ட பழங்களைத் தான் நாம் வாங்கி செல்வோம். ஏனென்றால் திராட்சையில் வைட்டமின் பி, வைட்டமின் சி, போலிக் அமிலம், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிகளவில் உள்ளது. எனவே எவ்வித உடல் நலப்பிரச்சனைகளில் உள்ளவர்களும் இதனை உட்கொள்ளலாம்.
இதோடு உலர் திராட்சைகளிலும் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. எனவே நாம் தினமும் உலர் திராட்சை நீரை பருகி வந்தால், உடல் ஆரோக்கியத்தோடு இருப்பது மட்டுமில்லாமல், சரும பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வாக அமைகிறது.
திராட்சை நீர் தயாரிக்கும் முறை:
முதலில் 150 கிராம் உலர் திராட்சையை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் ஊறவைத்த திராட்சையை எடுத்து வடிகட்டி குடிக்க வேண்டும். குறிப்பாக வெறும் வயிற்றில் குடித்தால் உடல் ஆரோக்கியம் மற்றும் முகம் பளபளப்பாகவும் இருக்குமாம்.
உலர் திராட்சை நீர் பேஸ் டோனர்
தேவையான பொருள்கள்:

திராட்சை நீர் – 1 கப், ரோஸ் வாட்டர் – 3 டீஸ்பூன், எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் திராட்சை நீரோடு ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறை நன்றாக கலக்க வேண்டும். பின்னர் இதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சேர்த்து வழக்கமாக ஃபேஸ் டோனராக பயன்படுத்தலாம்.
திராட்சை வாட்டர் ஃபேஸ் பேக்:
தேவையானப் பொருள்கள்:
திராட்சை நீர் – 1 டீஸ்பூன், தேன்- 1 தேக்கரண்டி
செய்முறை:
தேனுடன் திராட்சை நீரை சேர்த்து நன்றாக பேஸ்ட் செய்ய வேண்டும். பின்னர் உங்களது முகத்தில் பேஸ் பேக் போன்று தடவி 20 நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருந்து கழுவி விட வேண்டும்.
இந்த பேஸ்பேக் வறண்ட சருமத்திற்கு சிறந்ததாக அமைகிறது. ஒரு வேளை உங்களது சருமம் எண்ணெய் பிசுபிசுப்புடன் இருந்தால் இந்த பேஸ் பேக் கலவையோடு அரை தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ள வேண்டும்.