• Tue. May 30th, 2023

பா.ஜ.கவின் டி .என். ஏவுக்கு எதிரானது திமுக – அண்ணாமலை

ByA.Tamilselvan

Aug 2, 2022

பாஜகவின் டிஎன்ஏவுக்கு எதிரானது திமுகவின் கொள்கை என அண்ணாமலை பேட்டி
44வது செஸ் போட்டியின்போது பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டனர். இதன்பிறகு திமுக – பாஜக வுடன் கூட்டணிக்குவாய்பிருப்பதாக பேசப்பட்டது.இந்நிலையில் திமுக பிரிவினை பேசக்கூடிய சக்தி ,அதனோடு ஒருபோதும் பாஜக கூட்டணி வைக்க முடியாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் ” அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை விரைவில் விசாரணை நடத்தும் . அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது வேறு விசாரணையில் பிசியாக உள்ளனர். திமுகவுடைய கொள்கை பாஜக கட்சியின் டிஎன்ஏவுக்கு எதிரானது.தன்னிச்சையாக நின்று கூட பாஜக வெற்றி பெறும் என்றார்
முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் நடைபெற்ற கேரள செய்தியாளர்கள் சந்திப்பில் தற்போதுள்ள கூட்டணியே தொடரும் என கூறியுள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *