


கன்னியாகுமரியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையோடு இணைந்து அனைத்து வியாபாரிகள் சங்கங்கள் முழு கடை அடைப்பு
கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகளின் வருகையை நம்பியே, சிறு வியாபாரிகள் முதல் பெரும் வியாபாரிகள், சிறிய விடுதி முதல் பெரிய நட்சத்திர விடுதிகளின் உரிமையாளர்கள் வரை. இவர்களோடு நடை பாதை வியாபாரிகளின் வாழ்க்கை பயணம் உள்ளது.

கன்னியாகுமரியில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடங்கள், அரசுக்கு சொந்தமான இடங்களில் மாத வாடகையில் பெரும் எண்ணிக்கையில் கடைகள் உள்ளன.
அரசின் ஆணைப்படி கடை வாடகை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை 15_ சதவீதம் ஏற்றலாம் என்ற ஆணை நடைமுறையில் உள்ளது.



கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகளிலும் இந்த முறை தான் பல்லாண்டாக தொடரும் நிலையில், தற்போது சிறப்பு நிலை பேரூராட்சி நிலங்களில் கடை வைத்துள்ள பகுதிக்கு 15_சதவீதம் உயர்த்தாது. ஒவ்வொரு கடைகளும் தனித் தனியாக ஏலம் முறையில் வாடகை நிர்ணயம் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கன்னியாகுமரியில் இன்று கடற்கரை , பகவதி அம்மன் கோயில் சன்னதி தெரு, காவல் நிலையம் எதிரே உள்ள அனைத்து கடைகளையும் அடைத்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, தமிழன்னை கடைவியாபாரிகள், விவேகானந்தா கடை வியாபாரிகள் சங்கம், தென்குமரி வியாபாரிகள் சங்கம், பார்க் நியூ பஜார் வியாபாரிகள் சங்கம், ராஜீவீகாந்தி கடை வியாபாரிகள் சங்கம், திருவேணி சங்க வியாபாரிகள் சங்கம், காந்திஜி கடை வியாபாரிகள் சங்கம் என அனைத்து வியாபார சங்கங்களும் இணைந்து கடை அடைத்ததால் இன்று வந்த சுற்றுலா பயணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டனர். ஒன்று, இரண்டு உணவு விடுதிகள் மட்டுமே திறந்திருந்தது.


கடை அடைப்பு நடத்திய சங்கங்களை சேர்ந்த வியாபாரிகள் நடத்திய அனைத்து வியாபாரிகள் சங்கம் ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில அமைப்பாளர் முனைவர்.டேவிட்சன், மாநில செயலாளர் கருங்கல் ஜார்ஜ், பா.தம்பி தங்கம் உட்பட பலர் தற்போது கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்தும் வாடகை உயர்வு 15_ சதவீதம் என்ற நிலையை தொடர்ந்து, பின் பற்றாது புது முறையாக ஏலத்தின் மூலம் கடை வாடகை நிர்ணயம் செய்யும் நிலையை கண்டித்து பேசினார்கள்.


இந்த நிலை குறித்து, மாவட்ட ஆட்சியர் அழகு மீனாவை சந்தித்து கோரிக்கை வைக்க போவதாக தெரிவித்தார்கள்.


கன்னியாகுமரியில் ஒரு நாள் கடை அடைப்பு வியாபாரிகளுக்கு வருவாய் இன்மையை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு கன்னியாகுமரியில் மட்டுமே கிடைக்கும் கலைப் பொருட்கள் மற்றும் சிறப்பு உடைகள் வாங்க முடியாத நிலையை ஏற்படுத்தியது.



