• Mon. Aug 17th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

குமரியில் விமான நிலையம் அமைக்க எம்.பி விஜய்வசந்த் கோரிக்கை

விமான தளம், ரயில்களின் அதிகரிப்பு, நான்கு வழி சாலை குறித்து குமரி மக்களவை
உறுப்பினர் விஜய்வசந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கூறும் போது..,

கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தை ஆய்வு செய்தபோது, விமான நிலையம் அமைப்பதற்கு சாத்தியக்கூறு இல்லை என கூறப்பட்ட நிலையில், மறு ஆய்வு செய்யப்பட்ட போது, விமான நிலையம் அமைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளவை. தொடர்ந்து விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் விமான நிலையம் இருக்கும் போது, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு விமான நிலையம் வேண்டுமா என்ற கேள்வி எழுந்த போ,து கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா தளம் என்பதால் இங்கு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். விமான நிலையம் அமைந்தால் மாவட்டம் மேலும் வளர்ச்சி பெறும் என தெரிவித்தார். குமரி மாவட்டத்தில் நான்கு வழி சாலை பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இடையில் சில காரணங்களால் பணிகள் தடை பட்ட நிலையில், தற்போது பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு வருடத்திற்குள் நான்கு வழி சாலை பணிகள் அனைத்தும் முடிவு பெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை சுற்றுலா தளங்களை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். புற்று நோயால் குமரி மாவட்டத்தில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்காக ஒரு ஆய்வு மையம் மாவட்டத்தில் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம் என தெரிவித்தார். இரட்டை ரயில் பாதை பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டு வந்த ரயில் கொரோனாவுக்கு பின் நிறுத்தப்படுவதில்லை. மீண்டும் பழையது போல் ரயில் நிலையங்களில் அனைத்து தலைவர்களின் நிற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து ரயில் நிலையங்களையும் மேம்படுத்த வேண்டுமெனவும், சென்னையில் பொது மேலாளரை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளோம். வேளாங்கண்ணி, மற்றும் சென்னை- கன்னியாகுமரிக்கு புதிய ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மத்திய அரசின் பட்ஜெட் என்பது அடுத்தவரும் தேர்தலை நோக்கியே வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய உரிய நிதியை வழங்கவில்லை என அனைத்து எம்பிக்களும் குற்றச்சாட்டு வைத்துள்ளோம். அனைத்து எம்பிக்களும் பரிந்துரை செய்துள்ளதால் கண்டிப்பாக மாற்றம் ஏற்படும் என தெரிவித்தார். எதிர்க்கட்சி என்பதால் தங்களது எதிர்ப்பை அவர்கள் தொடர்ந்து காட்டி வருகின்றனர். கல்விக் கொள்கையிலும் தமிழகத்திற்கு எதிர்மறையாகவே அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.நாகர்கோவில் ரயில் நிலையத்தை மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என்று குமரி மாவட்டம் மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு முறையான ஒரு முடிவு இதுவரை எடுக்கவில்லை விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.