• Wed. Apr 24th, 2024

டி.வி.,நீயூஸ் பேப்பரில் இனி இதெல்லாம் வராது

ByA.Tamilselvan

Jun 13, 2022

ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான எந்த விளம்பரத்தையும் ஒளிபரப்பக்கூடாது என இணைய ஊடகம், அச்சு ஊடகங்களுக்கு மத்திய அரசு உத்திரவிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் ஆன்லைன்சூதாட்ட த்தால் பலர் தங்கள் சொத்துக்களை இழந்துள்ளனர்.பலர் தற்கொலை செய்து கொண்டனர்.கடந்த வாரத்தில் கூட சென்னையை சேர்த் பெண் ஒருவர் ரூ20 லட்சத்தை இழந்துள்ளார். மேலு ம் அவர் தற்கொலை செய்து கொண்டார். இது போன்று பல சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன.தமிழகத்தில் முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில குழு அமைக்கப்பட்டு தனி சட்டம் இயற்றப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான எந்த விளம்பரத்தையும் ஒளிபரப்பக்கூடாது என இணைய ஊடகம் அச்சு ஊடகங்களுக்கு மத்திய அரசு உத்திரவிட்டுள்ளது. மேலும் ஆன்லைன் சூதாட்டங்களால் நிதிசிக்கல்கள்,சமூக பிரச்சனை எற்படுகிறது.இளைஞர்கள் ,குழந்தைகள் மத்தியில் எதிர்மறை கருத்தை உருவாக்குகிறது என மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.ஆன்லைன் சூதாட்டம் மூலம் தொடர் தற்கொலைகள் நடைபெற்றுவரும் நிலையில் இந்த அறிவிப்பு முக்கியமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *