• Thu. Jul 16th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனை சந்தித்தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள்

தமிழ் சினிமா கொரோனா பொது முடக்கம் காரணமாக கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது அதன் காரணமாக தமிழ் சினிமாவுக்கு சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ச்சியாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்து வந்தனர் அது சம்பந்தமாக சங்க நிர்வாகிகள் செய்தி துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனை இன்று தலைமை செயலகத்தில் சந்தித்தனர் அது சம்பந்தமாக தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்

தமிழகத்தை கொரோனா பிடியிலிருந்து காப்பாற்றிட இரவுபகல் பாராமல் உழைத்துக்கொண்டிருக்கும் தமிழக முதல்வர் மரியாதைக்குரிய மு.க.ஸ்டாலின் அவர்களின் சீர்மிகு தலைமையில் திரை உலகத்தை மீட்டெடுத்திட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் மனு அளித்திருந்தோம்.

அதன் தொடர்ச்சியாக இன்று செய்தித்துறை அமைச்சர் மாண்புமிகு வெள்ளக்கோவில் சாமிநாதன் அவர்களிடம் வி.பி.எப். கட்டணம் குறைப்பது குறித்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்காக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்திடவும் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தித்துறை இயக்குனர் முனைவர் வி.ப.ஜெயசீலன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என்.இராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி கலந்துகொண்டனர்.