• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

கள்ளச் சந்தையில் மது வாங்க குவியும் மது பிரியர்கள்..,

BySubeshchandrabose

May 28, 2026

தேனியில் டாஸ்மாக் திறப்பதற்கு முன்பாக கள்ளச் சந்தையில் மதுபான விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது காலை 12 மணிக்கு மேல் டாஸ்மாக் திறக்கும் நிலையில் அதற்கு முன்பாக கள்ளச் சந்தையில் மது விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தேனி பங்களாமேடு பகுதியில் தேனி டிஎஸ்பி அலுவலகத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது.

தேனி – மதுரை பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் மதுபானங்களை வைத்துக்கொண்டு மது பிரியர்களுக்கு கூடுதல் விலையில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறார்.

பெரும்பாலும் ஏழை எளிய கூலித்தொழிலாளிகள் இந்த மதுபானங்களை ஆர்வமுடன் கூடுதல் விலைக்கு வாங்கி செல்கின்றனர்.

டிஎஸ்பி அலுவலகம் அருகே நடைபெறும் மதுபான விற்பனையால் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.