• Thu. Sep 17th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விழா கோலம் பூண்ட பசும்பொன் – தேவருக்கு மரியாதை செலுத்திய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம்…

Byமதி

Nov 1, 2021

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114 வது பிறந்தநாள் மற்றும் 59 வது குருபூஜை விழா கடந்த 30ஆம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், இன்று பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினர்.

தேசிய தலைவர் தெய்வத்திருமகனார் பசும்பொன்.உ. முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 114-வது ஜெயந்தி விழா 59-வது குருபூஜை விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் அமைந்துள்ள தெய்வத்திருமகனார் சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர், தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

இந்நிகழ்வில் மாண்புமிகு மதுரை மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு. ஆர்.பி.உதயகுமார், முன்னாள் அமைச்சர் மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர் செல்லூர் கே.ராஜு, மற்றும் முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, மதுரை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் VV.ராஜன் செல்லப்பா, மற்றும் திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் நத்தம் விசுவநாதன், ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் முனுசாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பெரிய புல்லான், ஐயப்பன், கழக வழிகாட்டுதல் குழு உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், மதுரை மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் எம். எஸ்.பாண்டியன் மற்றும் முன்னாள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பிர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.