

அஜித்தின் அடுத்த ஏகே 61 படத்திற்காக அதிரடி முடிவு எடுத்துள்ளாராம் நடிகர் அஜித்! வலிமை பட விமர்சனத்திற்கு இது பதிலடி என அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படம் பிப்ரவரி 24ம் தேதி ரிலீசாகி மாஸ் ஹிட்டடித்துக் கொண்டிருக்கிறது. முதல் நாளே தமிழகத்தில் வசூல் சாதனை படைத்த வலிமை, மூன்றே நாளில் 100 கோடி கிளப்பில் இணைந்து மற்றொரு சாதனை படைத்துள்ளது.
கொண்டாடப்பட்ட விமர்சனங்களை தாண்டி, அஜித்தின் குண்டான தோற்றத்தை சிலர் பாடி சேமிங் செய்து விமர்சித்தனர். அஜித் ஹேட்டர்ஸ் பலர் மோசமான விமர்சனங்களை பகிர்ந்து வந்தனர். ஒரு பக்கம் வலிமைக்கு எதிராக வழக்குகளும் போடப்பட்டு வருகிறது. ஆனால் அஜித் ரசிகர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், குடும்ப ஆடியன்ஸ் என யாரும் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. வலிமையை கொண்டாடி வருகின்றனர்.
வலிமையின் பிரம்மாண்ட வெற்றி கொடுத்த சந்தோஷத்துடன் ஹெச். வினோத், போனி கபூர், அஜித் ஆகியோர் அடுத்து 61 படத்திற்கு தயாராகி வருகின்றனர். இந்த படத்தின் ஷுட்டிங் மார்ச் 9ம் தேதி ஐதராபாத்தில் ஸ்பெஷல் பூஜையுடன் துவங்க உள்ளது. இந்த படத்தில் ஹீரோ, வில்லன் என இரண்டு கேரக்டர்களில் நடிக்கிறார் அஜித். வில்லன் கேரக்டருக்கான நெகடிவ் இமேஜை சமீபத்தில் போனி கபூரே வெளியிட்டார். இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், தபு உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
இந்நிலையில் இந்த படத்திற்காக அஜித் 10 கிலோ எடையை குறைத்துள்ளாராம். மொத்தம் 25 கிலோ வரை எடையை குறைக்க பிளான் செய்துள்ளாராம். சமீபத்தில் நீண்ட வெள்ளை தாடியுடன் அஜித், சென்னையில் ஓட்டல் ஒன்றிற்கு வந்த போது எடுக்கப்பட்ட போட்டோ ஒன்று வெளியானது. இது ஏகே 61 ல் வில்லன் ரோலிற்கான கெட்அப்பாம். ஸ்லிம் தோற்றம் ஹீரோவிற்கானது என கூறப்படுகிறது.
நேர்கொண்ட பார்வையில் வக்கீல், வலிமையில் போலீஸ் அதிகாரியாக நடித்த அஜித், ஏகே 61 படத்தில் மிக சாதாரண மனிதர் ரோலில் நடிக்க போகிறாராம். வலிமையில் அஜித்திற்கு டூயட் சாங் இல்லையே என கவலைபட்ட ரசிகர்களை குஷிப்படுத்த ஏகே 61 படத்தில் அஜித்திற்கு ஜோடியாக அதிதி ராய் நடிக்க போகிறாராம். மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய விபரங்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாம்.
