• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அதிமுகவின் பொன்விழா கொண்டாட்டம் நாளை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது

Byமதி

Oct 16, 2021

இதுகுறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளனர்.

அதில், அதிமுக பொன்விழா ஆண்டை சிறப்பித்திடும்‌ வகையில்‌, பிரம்மாண்டமான மாநாட்டை நடத்துதல்‌, பொன்விழா கொண்டாட்ட சிறப்பு இலச்சினை வெளியிடுதல், பொன்விழா இலச்சினை பதிக்கப்பட்ட, தங்க முலாம்‌ பூசப்பட்ட பொன்விழா பதக்கங்களை அதிமுக முன்னோடிகளுக்கு அணிவித்தல்‌. தந்‌தை பெரியார்‌, பேரறிஞர்‌ அண்ணா, புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌, புரட்சித்‌ தலைவி ஜெயலலிதா மற்றும்‌ அதிமுக ஒருங்கிணைப்பாளர்‌, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்‌ ஆகியோரது படங்களுடன்‌, பொன்விழா ஆண்டை குறிப்பிடும்‌ வகையிலான லோகோவுடன்‌ ஒரே மாதிரியான பதாகைகள்‌ மற்றும்‌ சுவரொட்டிகள்‌ மாநிலம்‌ முழுவதும்‌ புதுப்‌ பொலிவுடன்‌ அமைக்க வேண்டும்.

அதிமுக பொன்விழா ஆண்டை சிறப்பிக்கும்‌ வகையில்‌, அதிமுக வளர்ச்சிக்காகத்‌ தொண்டாற்றும்‌ எழுத்தாளர்கள்‌, பேச்சாளர்கள்‌, கவிஞர்கள்‌, கலைத்‌ துறையினர்‌ உள்ளிட்டோருக்கு இந்தப்‌ பொன்விழா ஆண்டுமுதல்‌, தந்‌தை பெரியார்‌, பேரறிஞர்‌ அண்ணா, புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜிஆர்‌. புரட்சித்‌ தலைவி ஜெயலலிதா ஆகியோரது பெயர்களில்‌ விருதுகள்‌ வழங்கி, கெளரவிக்க வேண்டும்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ தொடங்கிய நாள்முதல்‌ இன்றுவரை, அதிமுக வரலாற்றின்‌ முக்கிய நிகழ்வுகளை “மக்கள்‌ தொண்டில்‌ மகத்தான 50 ஆண்டுகள்‌’” என்ற தலைப்பில்‌ குறிப்பேடாக அச்சடித்து வழங்குதல்‌ மற்றும் தலைமைக்‌ அலுவலகத்திற்கு “புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌. மாளிகை” என பெயர்‌ சூட்டுதல், எம்.ஜி.ஆர். பற்றியும்‌, ஜெயலலிதா பற்றியும்‌, அதிமுக பற்றியும்‌ நூல்களை எழுதியுள்ள ஆசிரியர்களை அழைத்து கெளரவித்தல்‌, எம்‌.ஜி.ஆர்‌. மன்றங்களில்‌ இருந்து அதிமுக பணிகளைத்‌ தொடங்கிய மூத்த முன்னோடிகளுக்கு சிறப்பு செய்தல்‌ போன்றவற்றை இந்தப்‌ பொன்விழா ஆண்டில்‌ நிறைவேற்ற வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அதன்படி, அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு ‘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை’ எனப் பெயரிப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்த உள்ளனர். எனவே 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் தலைவர்கள் நினைவிடங்களுக்கு 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இப்படி பொன்விழா ஆண்டை தடபுடலாக அதிமுக கொண்டாட தயராகி வருகிறது. இந்த நிலையில், விருதுநகர் மேற்கு மாவட்டம் விருதுநகர் பர்மா காலனியில்லுள்ள கொடிமரம் பள்ளி அருகில் 50 அடி கொண்ட ராட்சச கொடிக்கம்பம் இன்று நடப்பட்டுள்ளது. முன்னாள் பால்வளத்துறை அமைச்சர்,விருதுநகர் மேற்கு மாவட்ட செய்லாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நாளை இதில் கலந்து கொள்ள உள்ளார். மேலும் இந்த கொடிக் கம்பம் நடும் நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் R. விஜயகுமார், நகர கழக செய்லாளர் M.முகமது நெய்னார்,ஒன்றிய கழக செய்லாளர் கண்ணன், தருமலிங்கம், R. பாலகிருஷ்ணன், ஒன்றிய அவை தலைவர் S.மாரியப்பன்,
ஜெயபாண்டி, சந்தோஷ் பாண்டி, A. முனுசாமி, மீனாட்சி சுந்தரம், ஜெயா டிவி கண்ணன், சுந்தர பாண்டி, பால்பாண்டி, மாரிகணி, சரவணன், சக்திவேல், ராஜா, சுரேஷ் பாண்டி, டெலிபோன் பாண்டி, பிச்சை, தகவல் தொழில்நுட்ப அணியின் நகர செயலாளர் பாசறை சரவணன் உள்ளிட்ட பெரும்பானோர் காந்துகொள்ள உளனர். அதோடு மட்டுமல்லாமல் அனைவருக்கும் இனிப்பு வகைகளும் ,கேக் வகைகளும் கொடுக்க உள்ளனர்.