• Sun. Mar 26th, 2023

அன்றும் சொன்னேன், இன்றும் சொல்கிறேன் அதிமுக சசிகலாவின் கையில் போய் சேறும் – கார்த்தித் சிதம்பரம் உறுதி…

சசிகலா வசமே அதிமுக சென்றடையும் என கார்த்தித் சிதம்பரம் உறுதியான கருத்தை தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிறாவயல் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரத்திடம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது சசிகலா குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது,

அதற்கு பதில் அளித்த அவர் கூறியதாவது, அன்றும் சொன்னேன், இன்றும் சொல்கிறேன் அதிமுக சசிகலாவின் கையில் போய் சேறும் என்றார்.

தற்போது நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் வெற்றியானது திமுகவின் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி என்றும், வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுக கூட்டணியின் வெற்றி தொடரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அதிமுக தொண்டர்கள் சசிகலாவை தலைவராக ஏற்றுக் கொள்வார்கள் என்றும் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார். மேலும் தற்போது உள்ள அத்தலைவர்கள் அனைவரும் சரித்திர பிழையின் காரணமாக உருவான தலைவர்கள் ஆவார்கள். அவர்களை மக்கள் நீண்ட நாட்கள் மனதில் வைத்திருக்க மாட்டார்கள்.

தொடர்ந்து சீமானுக்கு வாக்குகளும், வேட்பாளர்களும் தற்காலிகமானது. நிரந்தரமானது கிடையாது என கார்த்திக் சிதம்பரம் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *