



அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்து ஆபாசமாக பேசியதைக் கண்டித்து, வருகிற ஏப்ரல் 16ஆம் தேதியன்று அதிமுக மகளிரணியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
பெண்கள் குறித்து பேசிய எஸ்வி.சேகர் நீதிமன்றத்துக்கு அலையாய் அலைந்து கொண்டிருக்கையில், பல முறை பெண்கள் குறித்து அபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசியயுள்ள அமைச்சர் பொன்முடி மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காதது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், தற்போது திமுக அரசின் வனத்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி. அண்மையில் விழுப்புரத்தில் நடந்த பெரியார் தின பொதுக்கூட்டத்தில் பேசும்போது, பெண்கள் குறித்தும், சைவம், வைணவத்தை அவமதிக்கும் வகையில் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. .அதில் பொன்முடி பேசிய கருத்துக்கள், அருவருக்கத்தக்கதாக, காதில் கேட்கவே முடியாத ஒன்றாக உள்ளது.
அவரது அருவறுக்கத்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து, அவரை கண்டிப்பதாக கனிமொழி எம்.பி. அறிக்கை கொடுத்தார். இருந்தாலும் அவர்மீது பெண்கள் கடுமையாக வசை பாடிய நிலையில், அவரது கட்சி பதவி பறிக்கப்பட்டது. ஆனால், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அவர்மீது காவல்துறை வழக்கு பதிய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த விஷயத்தில் தமிழக அரசு மவுனம் காக்கிறது.
இந்தநிலையில், பெண்கள் பற்றி ஆபாசமாகப் பேசிய அமைச்சர் பொன்முடிக்கு எதிராக சென்னையில் ஏப்ரல் 16 ஆம் தேதி அதிமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..,
பெண்களை இழிவுபடுத்திப் பேசிய அமைச்சர் பொன்முடியைக் கண்டித்து சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே அதிமுக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

