• Wed. Apr 24th, 2024

மதுரை மாநகராட்சி கூட்டத்திலிருந்து அதிமுக வெளிநடப்பு

ByA.Tamilselvan

May 18, 2022

மதுரை மாநகராட்சி மேயருக்கு உதவ ஊதியம் இல்லாத ஆலோசகர் நியமனம் தொடர்பாக ஒப்புதல் கோரப்பட்டதால் சர்ச்சை – ஆயிரம்கோடி கடனால் மாமன்ற உறுப்பினர்களுக்கு சிறப்பு நிதி உயர்த்தி அளிக்க இயலவில்லை – மேயர் பதில் – சொத்து உயர்வை கண்டித்து அதிமுக வினர் வெளிநடப்பு. செய்தனர்.
மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மேயர் இந்திராணி மற்றும் ஆணையாளர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சியில் புதிதாக நியமிக்கப்பட்ட பொறியாளர்கள் தொடர்பாகவும் மாமன்றத்தில் ஒப்பதல் பெறுவதற்கான குறிப்பு வழங்கப்பட்டது. இதில் மதுரை மாநகராட்சி மேயருக்கு ஆலோசனைகள் வழங்க, கொள்கைகள், செயல்முறை மற்றும் திட்டங்கள் குறித்து ஆலோசனை வழங்குதல், ஆய்வுகள் தணிக்கைகள் மற்றும் கூட்டங்கள் ஆகியவற்றில் மேயருடன் கலந்து கொள்ளுதல், அரசுத் துறை மற்றும் உயர் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்களுடன் பணிகள் தொடர்பான மேயர் தெரிவிக்கும் தகவல்களை தகவல் பரிமாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அர்ச்சனா தேவி என்பவரை ஊதியமின்றி நியமனம் செய்வதற்கான ஒப்பதல் கோரப்பட்டிருந்தன. இது சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் மேயரை தனி நபர் மூலமாக கட்டுப்படுத்தும் முயற்சி எனவும் எதிர்கட்சி மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற கேள்வி நேரத்தில் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மண்டல குழு தலைவர்களின் கேள்விகளுக்கு மேயர் பதிலளிக்காமல் முழுவதிலுமாக மேயரின் கூற்றுபடி என்ற வார்த்தையோடு மாநகராட்சி ஆணையாளரே பதில் அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
தொடர்ச்சியாக நடைபெற்ற கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு நிதி குறித்து எதிர்கட்சியினர் எழுப்பிய கேள்வியின் போது பதிலளித்த மேயர் மாநகராட்சிக்கு ஆயிரம் கோடி கடன் உள்ளதாக பதிலளித்த நிலையில், ஒப்பந்த பணியாளருக்கான நிலுவைத்தொகை போன்ற நிதிச்செலவீனங்கள் இருப்பதால் சிறப்பு நிதியை உயர்த்த வாய்ப்பில்லை என பதிலளித்தார்.
இதனையடுத்து சொத்து வரி உயர்வை திரும்ப பெற கோரி எதிர்கட்சியான அ.தி.மு.க.உறுப்பினர்கள் மேயர் முன்பாக முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து திமுகவினரும் முழக்கமிட்டதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து எதிர்கட்சியான அ.தி.மு.க.மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சிதலைவர் அ.தி.மு.க.வை சேர்ந்த சோலைராஜா பேசுகையில் :
சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் எனவும், உறுப்பினர்களின் கேள்விக்கு மேயர் பதிலளிக்கவில்லை , மேயருக்கான ஆலோசகரை நியமிப்பது தொடர்பாக குறிப்பு இடம்பெற்றது தேவையற்றது, கடந்த ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களை தற்போது முடக்கிவைப்பதாகவும் குற்றம்சாட்டினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *