மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி போராட்டம் நடைபெற்றது. 2012-ம் ஆண்டு வீடில்லாத 89 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கபட்டது. பல முறை முயற்சி செய்தும் கடந்த 10 ஆண்டுகளாக எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை.நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பூர்வகுடி மக்கள் விடுதலை கட்சி சார்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் தலைவர் செல்லக்கண்ணு தலித் பவுண்டேசன் முருகேசன், செல்வி, ஆனந்த மகாலட்சுமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.