• Tue. Dec 10th, 2024

அதிமுக ஓட்டு வங்கி சரிந்துள்ளது – முன்னாள் எம்எல்ஏ கதிரவன்

Byகுமார்

Feb 25, 2022

அகில இந்திய பார்வர்டு பிளாக் தமிழ்நாடு மாநில குழு சார்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர் பிவி கதிரவன் கூறுகையில், ‘குறிப்பாக தென் மாவட்ட மக்கள் நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு அதிகமானோர் வாக்களித்துள்ளனர். அதிமுகவின் ஓட்டு வங்கி சரிந்துள்ளது. இந்த நிலையை தக்க வைக்கப்பட வேண்டும். மேலும் திமுக அரசு மக்களின் நன்மதிப்பைப் பெற்று இருப்பதற்கு வாழ்த்துக்களையும் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் 9 மாத ஆட்சியில் அவருடைய சிறந்த நடவடிக்கையால் அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.

தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றுவதிலும் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு புதிய சட்டங்கள் திட்டங்கள் கொண்டு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார். அனைத்து கட்சித் தலைவருகளும், எதிர்க்கட்சித் தலைவர்களும் பாராட்டுகின்ற வகையில் செயல்திறன்மிக்க முதல்வராக செயல்பட்டு வருகிறார்.’ என்றார்!

மேலும் மதுரை, திருநெல்வேலி மாநகராட்சியில் மேயர் மற்றும் துணை மேயர் பதவிகள் முக்குலத்தோர் சமுதாயத்திற்கு வழங்கி பெருமை சேர்க்க வேண்டும் என்றும் முதல்வரை கேட்டுக் கொண்டார். மேலும் மத்தியில் ஆளுகின்ற ஒன்றிய அரசு மழை மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நிவாரணம் தமிழகத்திற்கு வழங்கப்படவில்லை அதை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், பாஜக தமிழகத்தில் என்றுமே கால் வைக்க முடியாது. அவர்களின் இரட்டை வேடத்தை தமிழக மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள். எப்போதும் பாஜகவை தமிழகத்தில் நுழைய விடமாட்டார்கள்.

அதிமுகவில் ஒற்றை தலைமை இரட்டைத் தலைமை என்பது அவர்களது கட்சியின் கோட்பாடாக இருக்கலாம். என்னை பொருத்தவரை சிறந்த ஆட்சி தான் முக்கியமே தவிர தலைமை இல்லை, என்றார்!