மஞ்சூரில் விலைவாசி வியர்வை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுது.இதில் திரளாக கலந்து கொண்ட பெண்கள் முதியவர்கள் கலந்துகொண்டனர்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜாரில் ஆளும் திமுக அரசின் 18 மாத கால ஆட்சி சொத்து வரி உயர்வு மின் கட்டண உயர்வு பால் விலை உயர்வு விலைவாசி உயர்வு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளிட்ட மக்களை வாட்டி வதைத்து வரும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உயர்த்தப்பட்ட கட்டணங்கள் உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மஞ்சூர் பஜார் மாரியம்மன் திடலில் அதிமுக பேரூராட்சி செயலாளர் சிவராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளராக நீலகிரி மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் கலந்து கொண்டார். குந்தா மேற்கு ஒன்றிய செயலாளர் சக்சஸ் சந்திரன் உதகை மேற்கு ஒன்றிய செயலாளர் பெள்ளி குந்தா ஒன்றிய செயலாளர் வசந்த ராஜன் சிறப்புரை ஆற்றினார்கள்.
அவைத் தலைவர் துரைசாமி கவுன்சிலர் ராஜேஸ்வரி மாவட்ட பிரதிநிதி சுரேஷ் முன்னிலை வகித்தனர். கீழகுந்தா பேரூராட்சி கழகத்தின் சார்பில் திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து கோரிக்கைகளை வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பியும் தமிழக முழுவதும் வரலாறு காணாத வகையில் 150 சதவீத வரையிலான சொத்து வரி உயர்வு ஏழை எளிய நடுத்தர மக்கள் தங்கள் வாழ்க்கை நடத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டு கொண்டிருக்கும் வேளையில் நூதன முறையில் மின் கட்டண உயர்வு மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவையான பால் விலை உயர்வு பொருட்களின் கடுமையான விலையேற்றத்தை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது .இதில் ஏராளமான பெண்கள் முதியவர்கள் இளைஞர்கள் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கிளை செயலாளர் கோபால் ரவிக்குமார்,விஸ்வநாதன்,ரமேஷ்,ராஜேந்திரன் அர்ஜுனன் கணேஷ் சித்தன் மூர்த்தி ராஜேந்திரன் பாலசுப்பிரமணியம் பாண்டியன் ராணி தேவன் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.நன்றி உரை ஜெயபிரகாஷ் வழங்கினார்.