நீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா பாலம் பகுதியில் குழந்தைகள் பராமரிக்கப் படுவதற்காக அங்கன்வாடி மையம் நடைபெற்று வருகிறது இதில் 13கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளன.
இதில் குந்தா பாலம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சுரேஷ் தன்து மகன் கௌஷிக் வழக்கம்போல அங்கன்வாடியில் காலையில் விட்டுச் சென்று மாலை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். வீட்டிற்கு வந்த கௌஷிக் அழுது கொண்டே இருப்பதைக் கண்ட சுரேஷ்குழந்தையின் சட்டையை கழட்டிய போது உடம்பில் பல இடங்களில் பெரம்பால் தாக்கிய தழும்பை காணப்பட்டன. உடனடியாக மஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.மருத்துவர் பரிசோதித்ததில் பெரம்பால் தாக்கியதில் ஏற்பட்ட காயங்கள் எனக்கூறி சிகிச்சை அளிக்கப்பட்டது.குழந்தையை தாக்கிய அங்கன்வாடி ஆசிரியை கவிதா மீது சுரேஷ் மஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.