• Fri. May 1st, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

மதுரை விமான நிலையம் சுற்று வட்டார பகுதியில் அதிமுக போஸ்டர்கள்

ByKalamegam Viswanathan

Oct 29, 2024

அதிமுக தொண்டர்கள் என மதுரை விமான நிலையம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் வி.கே.சசிகலாவே வரவேற்கும் விதமாக திடீர் போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

களை எடுப்பதற்கு கூரைப்புல் அல்ல ஆலமரம் அஇஅதிமுகவின் ஆணிவேர வருக! வருக!! என தேவர் ஜெயந்திக்கு மரியாதை செலுத்த வரும் V.K.சசிகலாவை வரவேற்கும் விதமாக மதுரை விமான நிலையம் சுற்று வட்டார பகுதியில் அதிமுக போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

அக்டோபர் 30ஆம் தேதி 117வது தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையில் கலந்து கொள்வதற்காக முன்னாள் அஇதிமுக பொதுச்செயலாளர் V.K. சசிகலா சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வருகிறார்.

மதுரை விமான நிலையத்தில் V.K. சசிகலாவுக்கு கட்சித் தொண்டர்கள் வரவேற்பு அளிக்க தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரையில் தங்கி நாளை காலை கோரிப்பாளையம் தேவர் சிலை மற்றும் மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து கட்சித் தொண்டர்களுடன் சாலை மார்க்கமாக பசும்பொன் குருபூஜையில் கலந்து கொள்கிறார்.

இதற்கு இடையே அதிமுக தொண்டர்கள் சார்பாக வி கே சசிகலாவை வரவேற்கும் விதமாக “களை எடுப்பதற்கு கூரைப்புல் அல்ல (நாங்கள் ) ஆலமரம் அஇஅதிமுகவின் ஆணிவேரே வருக! வருக!!” என அதிமுக கட்சி தொண்டர்கள் மதுரை விமான நிலையம், பெருங்குடி சிந்தாமணி சந்திப்பு, விரகனூர் ரிங்ரோடு மற்றும் பசும்பொன் செல்லும் தேசிய நெடுஞ்சாலை சுற்றுவட்டார பகுதிகளில் அதிமுகவினரால் சர்சைக்குரிய வகையில் சசிகலாவை வரவேற்கும் விதமாக போஸ்டர்கள் ஓட்டியுள்ளனர்.