• Sat. Jul 12th, 2025
WhatsAppImage2025-06-06at0431542
WhatsAppImage2025-06-06at04315413
WhatsAppImage2025-06-06at04315415
WhatsAppImage2025-06-06at04315412
WhatsAppImage2025-06-06at0431543
WhatsAppImage2025-06-06at0431548
WhatsAppImage2025-06-06at0431547
WhatsAppImage2025-06-06at04315410
WhatsAppImage2025-06-06at0431549
WhatsAppImage2025-06-06at04315411
WhatsAppImage2025-06-06at0431545
WhatsAppImage2025-06-06at04315414
WhatsAppImage2025-06-06at0431544
WhatsAppImage2025-06-06at0431546
previous arrow
next arrow

பெயரை மீண்டும் எழுதிச்சென்ற அதிமுகவினர்..,

ByVasanth Siddharthan

Jun 4, 2025

நத்தத்தில் புதிதாக துவக்கப்பட்ட அரசு கலைக் கல்லூரியின் தற்காலிக கட்டிடத்தில் எழுதப்பட்டிருந்த சட்டமன்ற உறுப்பினர் பெயரை அளித்த கல்லூரி நிர்வாகம். மீண்டும் எழுதிச்சென்ற அதிமுகவினர்.

தமிழ்நாடு முழுவதும் கடந்த 26.5.2025 அன்று நத்தம் உள்ளிட்ட 11 இடங்களில் அரசு கலைக் கல்லூரியினை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். நத்தத்தில் துவக்கி வைக்கப்பட்ட அரசு கலைக்கல்லூரி புதிய கட்டிடம் ஏதும் இல்லாததால் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்த பழைய கட்டிடத்தை புதுப்பித்து கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2023 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 34 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 2 வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டது. அதில் முன்னாள் அமைச்சரும் நத்தம் சட்டமன்ற உறுப்பினருமான நத்தம் இரா.விசுவநாதன் அவர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டும் கட்டிடத்தின் முகப்பு பகுதியில் அவரது பெயரும் எழுதப்பட்டிருந்தது.

தற்போது அவர் பெயர் எழுதப்பட்டிருந்த முகப்பு பகுதியில் புதிதாக பெயிண்ட் அடித்து மறைக்கப்பட்டிருந்தது. இதை அறிந்த நத்தம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர், அதிமுக ஜெயலலிதா பேரவை மாநில இணைச் செயலாளர் கண்ணன் தற்காலிக கல்லூரிக்கு வந்து காவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் அந்தப் பெயரை எழுத எங்களுக்கு அனுமதிக்க வேண்டும் எனவும், கல்லூரி திறப்பு விழாவிற்கு தற்காலிக கல்லூரி வாசலில் வைக்கப்பட்ட திமுகவின் பிரம்மாண்ட பேனர்கள் கூட இன்னும் அகற்றப்படாத நிலையில் உள்ளே எழுதப்பட்டிருந்த சட்டமன்ற உறுப்பினர் பெயரை அழிப்பதற்கான அவசியம் என்ன என காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதன் பின்னர் அங்கு வந்த திண்டுக்கல் ரூரல் டிஎஸ்பி சிபி சாய் சௌந்தர்யன் அதிமுகவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அரசு கல்லூரிகளில் யாருடைய பெயரும் இடம்பெற கூடாது என கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதனடிப்படையில் இங்கிருந்த பெயர் அழிக்கப்பட்டது என விளக்கம் அளித்தார். அவரின் விளக்கத்தை ஏற்காத அதிமுகவினர் ஏற்கனவே எழுதப்பட்டிருந்த அதே இடத்தில் சட்டமன்ற உறுப்பினர் பெயரை எழுதுவோம் எனக் கூறி அந்த இடத்தில் மீண்டும் எழுதி சென்றனர்.

காவல்துறையினருக்கும் அதிமுகவினருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.