
தமிழக அரசு அங்கன்வாடி பணியாளர் மற்றும் சத்துணவு பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு நேர்முகத்தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன் அவரது சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்று வரும் அரசு அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர் காண நேர்முக தேர்வில் கலந்து கொண்டவர்கள் தங்களை நியமனம் செய்ய சிபாரிசு செய்ய என்னை அணுக வேண்டாம் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து திமுக வட்டாரம் தெரிவிக்கின்ற தகவல் காந்திராஜன் அவரது ஆதரவாளர்களுக்கு வேலைக்கு சிபாரிசு செய்தும் மேற்கு மாவட்டச் செயலாளரும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்களுக்கு மறுப்பு தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் அமைச்சர் மீது கடுமையான கோபத்தில் இருப்பதாகவும், அதனால் அவரது அலுவலகத்திலேயே இந்த மாதிரி அறிவிப்பு பலகை வைத்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சருக்கும் சட்டமன்ற உறுப்பினருக்கும் நடைபெற்று வரும் பனிப்போர் வேடசந்தூர் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.
