

அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடபட்ட வழக்கில் உரிய விசாரணை நடத்துவதற்கு சிபிசிஐடி காவல்துறைக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க டிஜிபி- உத்தரவிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் குற்றச்செயல்கள் நடந்த இடத்திற்கு வந்து சிபிசிஐடி அதிகாரிகள் பார்வையிடாதது அதிர்ச்சி அளிக்கிறது. திருடப்பட்ட பொருட்களை மீட்பதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உரிய விசாரணை நடத்த சிபிசிஐடி காவல்துறைக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க டிஜிபி க்கு உத்தரவிடவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.