• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

திமுக பிரமுகர் கொலையில் அதிமுக நிர்வாகி மகன் கைது

சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு வியாசர்பாடி 59வது வட்ட திமுக நிர்வாகி சவுந்தரராஜன் என்பவர் தண்ணீர் கேன் போட்டுவந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 3ஆம் தேதி காலை பிராட்வே பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலுக்கு தண்ணீர் கேன்களை சவுந்தரராஜன் கொண்டுவந்திருக்கிறார்.

அப்போது ஆட்டோவில் அங்கு வந்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிச்சாய்த்து, அங்கிருந்து தப்பிச்சென்றது. இச்சம்பவம் குறித்து எஸ்பிளனேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், இக்கொலை வழக்கில் தொடர்புடைய அதிமுக பிரமுகர் கணேசன், அவரது மகன் தினேஷ் குமார் உள்ளிட்ட 5 பேர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இந்நிலையில், இந்தக் கொலை வழக்கோடு தொடர்புடைய சதீஷ் என்பவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக பிரமுகர் கணேசனின் மற்றொரு மகனான இவர், வழக்கறிஞர் ஆவார். செங்கல்பட்டு நீதிமன்றத்தில் பதுங்கியிருந்த இவரை, போலீசார் கைது செய்தனர்.