வரும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் விழா உலகமெங்கும் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் அதிமுக சார்பில் சென்னையில் உள்ள சேத்துப்பட்டு முதியோர் இல்லத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கழக நிருவாகிகள் பலர் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் கேக் வெட்டியும் வாழ்த்து தெரிவித்தனர்.
