• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

வேளாண் துறை அலுவலர்கள் புதுக்கோட்டையில் போராட்டம்..,

Byமுகமதி

Jul 17, 2026

புதுக்கோட்டை பி எல் ஏ ரவுண்டானா அருகில் இன்று பகலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண் துறையில் பணிபுரியும் அலுவலர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

அப்போது உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் இதுவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்படுத்தப்படாமல் இருந்த நிலையில் இப்போது வந்துள்ள அரசு அதைச் செயல்படுத்த வேண்டும் என்று அறிவித்து இருக்கிறது. அந்த திட்டம் செயல்படுத்தினால் விவசாயிகளுக்கு எதிராக இருக்கும் எனவே அதை செயல்படுத்தக் கூடாது என்று தெரிவித்தனர்.

இது குறித்து இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த அலுவலர் விவேக் கூறிய போது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசு உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் கொண்டு வந்த போது அதை செயல்படுத்தினால் விவசாயிகளுக்கு எதிராக இருக்கும் என்பதை அறிந்தவுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதை செயல்படுத்தவில்லை. இப்போது வந்த அரசு உடனே அதை செயல்படுத்த வேண்டும் என்று சொல்லி இருக்கிறது. அந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் என்ன பாதிப்பு வரும் என்றால் வேளாண் துறையில் இயங்கும் நான்கு துறை பணிகளையும் ஒரு வேளாண் அலுவலர் செய்ய வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுகிறது.

இதில் வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை என நான்கு துறை செயல்பட்டு வருகின்றன. இதனால் வேளாண்மை துறை அதிகாரிகளாகிய எங்களுக்கு பணி சுமையும் அழுத்தமும் அதிகரிக்கிறது. தோட்டக்கலைத் துறையின் வேலையை எங்களால் பார்க்க முடியவில்லை. இதனால் தோட்டக்கலை துறையின் மூலம் விவசாயிகளுக்கு சென்றடைய வேண்டிய திட்டங்களை எங்களால் கொண்டு போய் சேர்க்க முடியவில்லை.

இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. நாங்கள் தோட்டக்கலை அலுவலர்களுக்கான படிப்பு மட்டும்தான் படித்திருக்கிறோம். எங்களை வேளாண்மை துறைக்கான திட்டங்களை விவசாயிகளிடம் கொண்டு போய் சேர்க்கும் போது தவறான கருத்துக்களை நாங்கள் கொண்டு போய்ச் சேர்க்க நேரிடும். திட்டங்களையும் தொழில் நுட்பங்களையும் எடுத்துச் சொல்லும் போது தொழில்நுட்பங்களில் பல்வேறு தவறான நுட்பங்களை விவசாயிகளுக்கு கொண்டு சென்று சேர்த்தால் ஒட்டுமொத்த விவசாயத் துறையும் பாதிக்கும்.

இதனால் எங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக அரசுக்கு தெரியப்படுத்தும் விதமாக இந்த கவன இனிப்பு ஆர்ப்பாட்டத்தை இங்கு நடத்துகிறோம். இதை அரசியல் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் வரும் செவ்வாய்க்கிழமை தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் தொடர் போராட்டங்கள் நடத்த இருக்கிறோம் என்றார்.