• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

அமமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளராக வழக்கறிஞர் M. ஜெகதீசன் நியமனம்

Byகாயத்ரி

Jan 24, 2022

விருதுநகர் மத்திய மாவட்டம் அமமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளராக வழக்கறிஞர் M. ஜெகதீசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நியமித்துள்ளார்.

வழக்கறிஞர் M. ஜெகதீசன் முதலில் அதிமுகவின் இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளராக இருந்து பின் அமமுக துவங்கிய பிறகு அமமுகவில் இணைந்தார். அதன் தொடர்ச்சியாக அமமுகவில் இளைஞர் பாசறை மாவட்ட செயலாளராகவும் பணிப்புரிந்தார்.

M. ஜெகதீசன்

இவர் தன் களப்பணியை 1999-ல் அதிமுகவில் தொடங்கி இப்போது அமமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளராக தற்போது டிடிவி தினகரனால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்து விருதுநகரின் மத்திய மாவட்டங்களிலும் வழக்கறிஞராகவும் பணிப்புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.