• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தமிழக ஆளுனர் கன்னியாகுமரியில் சூரியன் மறைவதை காண முடியாமல் ஏமாற்றம்

கன்னியாகுமரிக்கு வருகை தந்த தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி பலத்த பாதுகாப்புக்கிடையே கன்னியாகுமரியில் சூரியன் மறைவதை காண முடியாமல் ஏமாற்றம்.


நாளைய தினம் குமரிக்கு வருகை தரவிருக்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை வரவேற்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று கன்னியாகுமரிக்கு தனது குடும்பத்தினருடன் வருகை தந்தார். குமரிக்கு வருகை தந்த அவர் சன்செட் பாய்ண்டில் சூரியன் அஸ்தமிக்கும் காட்சியை காண்பதற்காக தனது குடும்பத்தினருடன் அந்தப் பகுதிக்கு வருகை தந்தார். இன்று அந்தப் பகுதியில் மேகமூட்டமாக காணப்பட்டதால் சூரியன் கடலுக்குள் செல்வதை பார்க்க முடியவில்லை. இதனால் சூரியன் அஸ்தமிப்பதை காண முடியாமல் ஆளுநர் மற்றும் அவர் குடும்பத்தாரும் ஏமாற்றத்துடன் அவர்கள் தங்கியிருக்கும் தனியார் நட்சத்திர விடுதிக்கு திரும்பினர்.