• Sat. Jun 10th, 2023

பரோலில் உள்ள ரவிச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதி!

Byமகா

Feb 7, 2022

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்ட ரவிச்சந்திரன் தற்போது பரோலில் உள்ளார். காவலர்கள் பாதுகாப்புடன் ரவிச்சந்திரன் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், மெட்டில்பட்டி, சூரப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் தங்கியிருக்கிறார்.

இந்நிலையில் ரவிச்சந்திரனுக்கு இன்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்படவே அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஈ.சி.ஜி.எக்கோ உள்ளிட்ட பரிசோதனைகள் எடுக்கப்பட்டன.. பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *