• Tue. Dec 10th, 2024

மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்

ByA.Tamilselvan

Aug 21, 2022

நோய் பரவலை தடுக்க மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கொரோனா,குரங்கம்மை வரிசையில் தற்போது தக்காளி காய்ச்சல் நாடு முழுவதும் பரவி வருகிறது. கேரளாவில் 82 குழந்தைகளுக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.தொற்று அதிகமுள்ள பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க அம்மாநில சுகாதாரத்துறை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தக்காளி காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழ எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.