சாத்தூர் அருகே இருக்கன்குடியில் ஆடித்பெருந்திருவிழா வெள்ளிக்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியில் தமிழகத்திலே மிகவும் பிரசித்தி பெற்ற 500ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது.இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி,தை மாதங்களில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்த வருடம் ஆடித்திருவிழா கடந்த 12ம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது.ஆடித்திருவிழாவை முன்னிட்டு மாரியம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு பூஜைகளும் தீபாதாரனைகளும் நடைபெற்று வருகிறது.இந்த ஆடிபெருந் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடி மகா உற்சவ திருவிழா வெள்ளிகிழமை நடைபெற்றது.இதில் வெள்ளிகிழமை மதியம் 2மணிக்கு மேல் அம்மன் உற்சவர் கோவிலிலிருந்து சிறப்பு பூஜைகள் செய்யபட்டு பின்னர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளல் செய்து வீதி உலா நடைபெற்றது.
இத்திருவிழாவை காண பல்வேறு பகுதியிலிருந்து வியாழக்கிழமை முதலே பக்தர்கள் பாதையாத்திரையாகவும் வந்து பொங்கல் வைத்தல்,மாவிளக்கு,அக்னி சட்டி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான நேர்த்திகடன்களை மாரியம்மனுக்கு செலுத்தி அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.ஆடிபெருந்திருவிழாவிற்காக தென்மாவட்ட பகுதிகளான விருதுநகர்,திருநெல்வேலி,கோவில்பட்டி,தூத்துக்குடி,சங்கரன்கோவில்,தென்காசி,மதுரை, சிவகாசி,இராஜபாளையம் உள்ளிட்ட பகுதியிலுருந்து இருக்கன்குடிக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கபட்டு வருகின்றன.
மேலும் திருவிழாவை முன்னிட்டு கோயில் பகுதிகளில் மருத்துவ வசதி,குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனம் சார்பிலும் செய்யபட்டுள்ளது.இத்திருவிழாவிற்காக சாத்தூர் காவல்துறை துணை கண்கானிப்பாளர் நாகராஜன் தலைமையில் 1500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இத்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கர்ணாகரன்,பரம்பரை அறங்காவலர்கள் குழுத் தலைவர் ராமமூர்த்திபூசாரி உள்ளிட்ட பரம்பரை அறங்காவலர்களும்,கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.