• Fri. Jan 24th, 2025

மின்கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம்

Byவிஷா

Dec 3, 2024

தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்துவதில் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஃபெங்கல் புயல் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பொது மக்கள் மின்சார கட்டணம் செலுத்த கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் ஃபெங்கல் புயல் காரணமாக பெய்த கனமழையால் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. பல இடங்களில் காட்டாற்று வெள்ளத்தைப் போல ஓடிய மழை நீர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அடித்துச் சென்றது.
விழுப்புரத்தில், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் கரைபுரண்டோடிய நிலையில், தேசிய நெடுஞ்சாலை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்ட மக்கள், மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த டிசம்பர் 10ம் தேதி வரை காலநீட்டிப்பு தமிழ்நாடு அரசு வழங்கப்பட்டுள்ளது.