• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடிகை கஸ்தூரி தேர்தல் பிரச்சாரம்..,

ByVelmurugan .M

Apr 17, 2026

பாஜக மத்திய அரசு கொண்டு வந்துள்ள மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, பெண்களுக்கு ஆட்சியில் மூன்றில் ஒரு பங்கு அதிகாரத்தை உறுதி செய்கிறது. இது தமிழகப் பெண்களுக்கு ஒரு மிகப்பெரிய வரலாற்றுப் பெருமையை தேடித்தரும் புரட்சிகரமான முடிவு என தமிழ் திரைப்பட நடிகையும், பாஜக கலைப்பிரிவு மாநில பொறுப்பாளருமான கஸ்தூரி தெரிவித்தார்.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேப்பூரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் சரண்யா அன்பழகனை ஆதரித்து தமிழ் திரைப்பட நடிகையும், பாஜக கலைப்பிரிவு மாநில பொறுப்பாளருமான கஸ்தூரி தேர்தல் பிரச்சாரம் நேற்று இரவு செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொறுத்தவரைக்கும் பிரதமர் மோடி உடைய கனவுகளை நனவாக்கும் ஒரே ஒன்றுபட்ட செயல் வீரர் அணியாகத்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்பட்டு வருகிறது. அதுல பெண்களுக்கு மதிப்பு கொடுப்பதிலும், முன்னுரிமை கொடுப்பதிலும் மோடிக்கு நிகர் மோடி மட்டுமே!”

இன்றைய தமிழக அரசியல் சூழலில், மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. பாஜக மத்திய அரசு கொண்டு வந்துள்ள மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, பெண்களுக்கு ஆட்சியில் மூன்றில் ஒரு பங்கு அதிகாரத்தை உறுதி செய்கிறது. இது தமிழகப் பெண்களுக்கு ஒரு மிகப்பெரிய வரலாற்றுப் பெருமையை தேடித்தரும் புரட்சிகரமான முடிவு எனப் பார்க்கப்படுகிறது. இந்த மசோதாவைத் தமிழகத்தில் உள்ள சில கட்சிகள் எதிர்க்கின்றன: திமுக, காங்கிரஸ், மற்றும் விசிக போன்ற கட்சிகள் அடங்கிய கூட்டணி இதற்குத் தடையாக இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது.

இவர்கள் தொகுதி மறுசீரமைப்பு என்ற காரணத்தைக் கூறி, பெண்களுக்கான அதிகாரத்தைத் தள்ளிப்போட முயல்வதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. எந்தப் பின்னணியும் இல்லாத சாமானியப் பெண்களுக்கு அதிகாரம் கிடைப்பதைக் கண்டு இந்தக் கட்சிகள் அஞ்சுவதாகக் கூறப்படுகிறது. உண்மையான தமிழர்கள் யாரும் தமிழகத்தின் உரிமைகளை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். “எந்தப் பின்னணியும் இல்லாத எத்தனையோ பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கும் இந்த மசோதா, ஒரு மிகப்பெரிய சமூக மாற்றத்திற்கான தொடக்கம் தான் இது. எனவே தேசிய ஜனநாயக கட்சி கூட்டணிக்கு ஆதரவளிக்கவேண்டும் என தெரிவித்தார்.