• Sun. Dec 1st, 2024

நடிகர் கமலின் இந்தியன் 2 ஆகஸ்ட் இறுதியில் தொடங்க வாய்ப்பு..!

Byவிஷா

Jul 7, 2022

இயக்குனர் ஷங்கரின் இந்தியன் 2 திரைப்படம் ஆகஸ்ட் மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கதில் வெளியான விக்ரம் திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ள நிலையில், அப்படத்தின் வெற்றியை உலகநாயகன் கமலஹாசன் உற்சாகமாகக் கொண்டாடி வரும் நிலையில், இப்படத்திற்கு முன்பாகவே தொடங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் குறித்து சமீபகாலமாக எந்த ஒரு தகவலும் வெளியாகாமலேயே இருந்து வந்த நிலையில்,
இப்படத்திற்கான பணிகளை படக்குழு மீண்டும் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னர் வெளியான தகவல்களின்படி இயக்குனர் ஷங்கர் ராம்சரணை வைத்து ‘ஆர்சி15’ என்கிற படத்தின் பணிகளை முடித்த பின்னர் கமல் நடிக்கும் இந்தியன்-2 படத்தின் பணிகளை தொடங்குவார் என்று கூறப்பட்டு வந்தது.
ஆனால் தற்போதைய லேட்டஸ்ட் தகவல்களின்படி படக்குழு மீண்டும் இந்தியன்-2 படத்திற்கான பணிகளை ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆகஸ்ட்-22ம் தேதி முதல் தொடங்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடர்ந்து 100 நாட்கள் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, அதேசமயம் இந்த படத்தில் ஏற்கனவே ஒப்பந்தமாகி இருந்த காஜல் அகர்வால் நடிப்பாரா மாட்டாரா என்பது குறித்த தெளிவான தகவலும் தெரியவில்லை. தற்போது காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது, காஜல் அகர்வாலுக்கு பதில் வேறு நடிகையை படக்குழு தேர்வு செய்யுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் மறைந்த நடிகர் விவேக்கிற்கு பதிலாக இப்படத்தில் வேறு நாயகனை நடிக்கவைக்க ஷங்கர் முயற்சி செய்து வருகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த ‘இந்தியன்-2’ படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங்க், பிரியா பவானி ஷங்கர், டெல்லி கணேஷ் போன்ற பல நட்சத்திரங்களும் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *