இரட்டை இலையை முடக்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அதிமுகவில் நடைபெறும் ஒற்றை தலைமை பிர்ச்சனை உச்சகட்டமாக உள்ளது.வரும் ஜூலை 11 ல் பொதுக்குழு மீண்டும் கூட உள்ளது.இந்நிலையில் அக்கட்சியின் சின்னத்தை முடக்கோரி சென்னை அரும்பாக்கம் ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் மனுதாரர் ஜோசப் விளம்பர நோக்குடன் இந்த வழக்கை தொடர்ந்திருப்பதாக கூறி அவருக்கு ரூ25,000 அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.