இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது நடிக்கும் திரைப்படம் வாரிசு. இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
படத்தில் பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், ஸ்ரீகாந்த், குஷ்பூ, பிரபு என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். கமெர்ஷியல் ஆக்ஷன் பேமிலி என்டர்டைன்மென்ட் படமாக வாரிசு உருவாகி வருகிறது. பெரிதும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் இப்படம் வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. நான்காம் கட்ட படப்பிடிப்பு தற்போது வைசாக்கில் நடைபெற்று நிலையில், துறைமுகத்தில் நடைபெற்று வரும் ஆக்ஷன் காட்சியின் படப்பிடிப்பு புகைப்படம் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் லீக்கானது. அதை தொடர்ந்து நடிகர் விஜய் மாஸாக சண்டை போடும் வீடியோ தற்போது லீக்காகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.