• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

சதுரகிரி யாத்திரை ரத்து.. பக்தர்கள் ஏமாற்றம்!!

Byகாயத்ரி

Aug 9, 2022

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி மலைக்கோவிலில் பாதை யாத்திரைக்கு வனத்துறை அனுமதி மறுத்துள்ளது.

சதுரகிரி வனத்துறை கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட மலைப்பகுதியில் உள்ள சுந்தரமகாலிங்கம் சுவாமி மலைக்கோவிலுக்கு பக்தர்கள் மாதம்தோறும் பவுர்ணமி மற்றும் பிரதோஷம் நாட்களில் பாத யாத்திரை செல்வது வழக்கமாக உள்ளது.

இதற்காக ஒவ்வொரு மாதமும் யாத்திரைக்காக வனத்துறை 4 நாட்கள் வரை அனுமதி அளிக்கும். இந்த மாதம் ஆடி பவுர்ணமி வரும் 11ம் தேதி வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இதற்காக மலைக்கோவில் செல்ல பக்தர்கள் தயாரான நிலையில் வனத்துறை அனுமதி மறுத்துள்ளது. தற்போது மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதாலும், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாலும் சதுரகிரி யாத்திரைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், பவுர்ணமி வியாழக்கிழமை அன்று பக்தர்கள் சதுரகிரி செல்லும் வனத்துறை சாலையில் குவிய வேண்டாம் என்றும் வனத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் பக்தர்களை ஏமாற்றத்தில் உள்ளனர்.