• Fri. Dec 13th, 2024

ஆவின்பால் கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை!

ByA.Tamilselvan

Aug 29, 2022

ஆவின்பாலை கூடுதல் விலைக்கு விற்றால் உரிமம் ரத்து உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு..
தமிழக அரசு நிறுவனமான ஆவின் மூலம் விவசாயிகளிடம் இருந்து தினமும் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்தப் பால், கொழுப்புச் சத்து அடிப்படையில் மூன்று வகையாக தரம் பிரிக்கப்பட்டு, ஆரஞ்ச், பச்சை, நீல நிற பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுகிறது.
சென்னையில் தினமும் 14 லட்சம் லிட்டர்; மற்ற மாவட்டங்களில் 14 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகிறது.ஒரு பாக்கெட் பால் விற்பனை செய்வதன் மூலம் டீலர்களுக்கும், பார்லர் உரிமையாளர்களுக்கும் ஒரு ரூபாய் கமிஷன் வழங்கப்படுகிறது.. தனியார் பால் விலை உயர்வால் ஆவின் பாலை நோக்கி பொதுமக்கள் படையெடுக்க துவங்கி உள்ளனர்.ஹோட்டல்கள், கேன்டீன்கள், டீக்கடைகள் உள்ளிட்டவற்றின் தேவைக்காக ஆவின் பால் அதிகம் கொள்முதல் செய்யப்படுகிறது.இதனால், ஆவின் பால் விற்பனை அதிகரித்துள்ளது. இதனிடையே, ஆவின் பாலை டீலர்கள் மட்டுமின்றி அவர்களிடம் வாங்கிச் செல்லும் கடை உரிமையாளர்களும், ஒரு பாக்கெட்டுக்கு மூன்று முதல் ஐந்து ரூபாய் வரை கூடுதல் விலை வைத்து விற்கின்றனர்.எனவே, ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. கூடுதல் விலையில் பால் விற்பனை செய்யும் டீலர்களுக்கான உரிமம் ரத்து செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.