

தமிழ்நாட்டில் உள்ள 5 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தர உறுதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் 2127 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு மலேரியா, காசநோய் ,ரத்தத்தின் சர்க்கரை அளவு ஆகியவை கண்டறிய ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்திய தர கவுன்சிலிங் அங்கமான தேசிய தர நிர்ணய அங்கீகார வாரியம் ஆய்வங்களுக்கான தேசிய தர உறுதி சான்றிதழை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் தளவாய்பட்டினம், திருப்பத்தூர் மாவட்டம் பாச்சூர், ராமநாதபுரம் மாவட்டம் வெங்கிட்டாங்குறிச்சி, தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தர உறுதி சான்று வழங்கப்பட்டுள்ளது.

