• Tue. May 26th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

அடு்க்கடுக்காக சிவசங்கர் பாபா மீது குவியும் வழக்குகள்

By

Sep 2, 2021 ,

சிவசங்கர் பாபா மீது சிபிசிஐடி போலீசார் மேலும் இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளனர். சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் அளித்த புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைதான சிவசங்கர் பாபா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிவசங்கர் பாபா மீது மேலும் இரண்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

வெளிநாட்டில் உள்ள முன்னாள் மாணவி ஒருவர் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த மாணவி ஒருவரின் தாய் அளித்த புகாரின் அடிப்படியில் மேலும் ஒரு போக்சோ வழக்கு மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக, அவர் மீதுபோக்சோ வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.மேலும்,அவர்மீது உள்ள மற்ற போக்சோ வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.