• Sat. Feb 15th, 2025

மாநிலங்களவை முன்னாள் எம்.பி. காலமானார்

By

Sep 2, 2021 ,

முன்னாள் எம்பி சந்தன் மித்ரா மறைவு இந்திய பத்திரிகைத் துறையில் ஒரு வெற்றிடத்தை உருவாக்குகிறது என்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யும் மூத்த பத்திரிகையாளருமான சந்தன் மித்ரா நேற்று நள்ளிரவு உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில்,அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “சந்தன் மித்ரா ஒரு சிறந்த பத்திரிக்கையாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினராக அவரது புகழ் சேர்க்கப்பட்டது. இந்தி இதய நிலம் மற்றும் அதன் வரலாறு பற்றிய அவரது புரிதல் ஆழமானது. அவரது மறைவு இந்திய பத்திரிகைத் துறையில் வெற்றிடத்தை உருவாக்குகிறது.அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”என்று தெரிவித்துள்ளார்.